அடுக்குமாடி குடியிருப்பில் பிரச்சினைகளை தவிர்க்கும் வழிமுறைகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர். குறைந்த பராமரிப்பு செலவில் அதிக அளவிலான வசதிகளை அனுபவிக்க முடியும். ஆனால் அப்படி அனுபவிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் அவருக்கு மட்டுமே உரியது அல்ல, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவானவை.

உறவில் விரிசல் :
அனைவரும் சேர்ந்து அனுபவிக்கக்கூடிய வசதிகளைபயன் படுத்தும்போது அவர்களுக்கு இடையே அதைப்பற்றி முரண்பாடுகள் ஏற்படுவற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையேயான உறவில் விரிசல்களும்கூட வரலாம். என்வே அந்த சிக்கல்கள் வராமல் முன்கூட்டியே தவிர்த்துக்கொள்வது நல்லது. அடுக்குமாடி குடியிருப்பில் வரக்கூடிய சில முக்கியமான சிக்கல்களைப்பற்றி இப்போது பார்ப்போம்.

செல்ல பிரணிகள் :
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி அருகில் உள்ள வீட்டுக்காரருக்கு தொல்லைகள் கொடுக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லோரும் செல்ல பிராணிகளை விரும்பு வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அசோசினில் அனுமதி பெற்ற பிறகே, வீட்டில் செல்ல பிராணிகளை வளர்க்கவேண்டும். குஷீப்பாக நாய் போன்ற செல்ல பிராணிகளை வாக்கிங் அழைத்து செல்லும்போது மற்ற வர்களுக்கு அச்சம் ஏற்படாதவகையில் நடந்துகொள்ள வேண்டும்.

விருந்துகள்:
தற்போது அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் பார்ட்டி ஹால் வசதி செய்யப்பட்டுகிறது. அங்கேயே சிறிய அளவிலான வீட்டு விசெrங்களை நடத்திக் கொள்ளலாம். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் நண்பர்களுக்கு  அல்லது உறவினர்களுக்கு வீட்டிலேயே விருந்துகளை ஏற்பாடு செய்தால் கவன
மாக இருக்கவேண்டும். விருந்தின்போது ஏற்படும் சப்தங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு தொந்தரவாக மாஷீவிடக்கூடாது. இரவு நேரங்களில் விருந்துகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அது பலரது தூக்கத்தை கெடுக்க நேரிடலாம்.

வாகனங்கள் நிறுத்துமிடம் :
வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் பொதுவானது என்பதால் விருப்பத்திற்கு ஏற்றபடி அந்த  இடத்தை பயன்படுத்த கூடாது. ஒவ்வொருவரும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தங்களது வாகனத்தை நிறுத்த வேண்டும். அதைப்போல் கூடுதல் வாகனங்களையும் அங்கு நிறுத்தக்கூடாது.

புதுப்பிக்கும் பணிகள் :
வீட்டின் உள்ளே இருக்கும் அறைகளை விருப்பம்போல வடிவமைத்து கொள்ளலாம். ஆனால் வீட்டிற்கு வெளியே உள்ள பால்கனி, ஜன்னல் போன்ற வற்றை புதுப்பிக்கும்போது அசோசியேrனில் உள்ள அனைவரும் சேர்ந்து அப்பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லையயன்றால் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி தோன்றும்.

வீட்டின் உள்ளே புதுப்பிக்கும் பணிகளை செய்யும்போது சப்தம், தூசு ஆகியவை பக்கத்தில் வசிப்பவர்களை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர் இணைப்புகள், மின் இணைப்புகள் ஆகியவற்றை மாற்ஷீ அமைக்கும்போது அருகில் உள்ள வீடுகளின் இணைப்பு களில் சிக்கல்களை ஏற்படுத்தாத வகையில் அமைக்கவேண்டும்.

மின் இனைப்பு வசதிகள் :
அடுக்குமாடி குடியிருப்பு களில் அளிக்கப்படுகிற வசதிகள் முக்கியம். அதேநேரத்தில் அங்கு வசிப்பவர்களுக்கு இடையே சிக்கல்கள் வராமல் இருப்பது அதைவிடவும் மிக முக்கியம்.

பொதுஇடம் :
லிஃப்ட், வராந்தா, கார்டனிங்,மொட்டை மாடி, படிக்கட்டுகள், நடைபாதை, ஜிம், ஆடிட்டோரியம் என குடியிருப்பைப் பொறுத்து ஏராளமான பொதுஇடங்கள் ஒரு குடியிருப்பில் உள்ளன. உரிமையாளர்கள் தங்கள் சங்கத்தின் வாயிலாக அது குஷீத்த விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அதனை மீறாமல் நடக்க அனைவரும் செயல்பட வேண்டும்.