களிமண்ணுக்கு ஏற்ற அடித்தளம் எது?

பல குடியிருப்புகள் கட்டப்பட்டு – 10 ஆண்டு பயன்பாட்டிற்குப் பிறகு பழுதடைந்த கட்டடங்களுக்கு அடிமண் களிமண் / விரிவடையும் களிமண்ணாக இருக்கும் நிகழ்வுகளில் – சாதாரண குழிபடல் கொண்ட தனித்த பரவல் அடித்தளம் போடப்பட்டவை ( (Isolated Footings) -) – G+1/G+2 மாடிகள் கொண்டவை – இவற்றில் இருவகையான பழுதுகள் தோன்றுகின்றன.

மாறுபட்ட அடித்தளச் சரிவு / படிவு / இறக்கம் ஏற்பட்டு தரைத்தளம் கீழே இறங்கல்.மாறுபட்ட சரிவால் சுவர்களில் பலவிடங்களிலும் குறிப்பாக சன்னல் கீழ்மட்டம் மற்றும் மேல்மட்டம் முதலியவற்றில் தொடர்படுக்கை விரிசல்கள் ஏற்படுதல்.

இவற்றிற்கு முக்கிய காரணம் – தவறான – பொருத்தமற்ற அடித்தளங்களைக் களிமண்ணில் அமைத்தமையே. எனவே இத்தகைய மென்மையான களிமண் அடிமண்ணுக்கு ஏற்ற அடித்தளங்கள். தூண்களில் வரும் சுமை (பாரம்) – 500KN (50 tonnes)

அடிபெருத்த குத்துக் கழித்தூண்கள்
(under – Reamed Pile Foundation with Pile caps) – 3.50m to 4.50m depth). தூண்களில் வரும் சுமை (பாரம்) – 2000KN / 3000KN (200t/300t)..துளையிட்டு உடன்வார்த்த காங்கிரீட் குத்துத் தூண்கள் (Bored-Insitu-concrete piles with pile caps – 6.00m to 20.00m depth). முன்னது சாதாரண வீடுகளுக்கு(GF+2 Floors) பின்னது பின்மாடிக் கட்டடங்களுக்கும் மிகவும் பொருத்தமானவை. இவை தவிர விரிவடையும் களிமண்ணில் தனித்த பரவல் அடித்தளம்(Isolated RC Footings) போடுவது தவறானது, சரிவு மற்றும் விரிசல்களை ஏற்படுத்தக் கூடியது.சில நிகழ்வுகளில் – மிகக் கெட்டியான (Very Stiff) (விரிவடையாத) களிமண் 2.00 மீட்டர் முதல் 6.00 மீட்டர் ஆழம் வரை கிடைக்கப்பெற்றால் – அப்போது 2.40 மீட்டர் முதல் 3.00 மீட்டர் வரை அடித்தளக்குழிகள் தோண்டி – 600 மி.மீட்டர் முதல் 100 மி.மீட்டர் வரை – உடைகற்றூள் மற்றும் செஞ்சரளை மண் (Stone crusher Dust : Gravel Mix 1:3, Semidry) கலவையினை 3 அல்லது 5 அடுக்குகளாகக் கொட்டிக் கெட்டிப்படுத்தி அடிமண்ணில் சரிவு / படிவு ஏற்படாதவாறு உறுதிப்படுத்தி அதன் மீது தனித்த பரவல் அடித்தளம் (Isolated Footings) போடலாம். இதைச் செய்யும் போது கூடுதலான கவனமும் முன்னெச்சரிக்கையும் தேவை. நல்ல பட்டறிவும் திறமையும் கூடிய கட்டுமானப் பொறியாளர் / அடித்தள வடிவமைப்புப் பொறியாளர் ஒருவரின் வழிகாட்டுதலோடு செய்திட வேண்டும்.